உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜீவன் ரக்ஷா பதக் 2021 விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Posted On: 25 JAN 2022 3:33PM by PIB Chennai

ஆறு பேருக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், 16 பேருக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் 29 பேருக்கு ஜீவன் ரக்ஷா பதக் என 51 நபர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக் 2021விருதுகளை  வழங்குவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் ஐவருக்கு அவர்களது மறைவுக்குப் பின் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றும் சிறந்த செயலுக்காக ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் வழங்கப்படுகின்றன. சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம ஜீவன் ரக்ஷா பதக் மற்றும் ஜீவன் ரக்ஷா பதக் என மூன்று பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றும் சிறந்த செயல் புரிந்த அனைத்து தரப்பு மக்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். இந்த விருதை ஒருவருக்கு அவரது மறைவுக்குப் பின்னரும் வழங்கலாம்.

விருதின் அங்கங்களான பதக்கம், மத்திய உள்துறை அமைச்சரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை விருது பெற்றவருக்கு உரிய நேரத்தில் அந்தந்த மத்திய அமைச்சகங்கள்/அமைப்புகள்/மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும்.

விருது பெற்றவர்களின் பட்டியல் மற்றும் மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792476  

-----


(Release ID: 1792538) Visitor Counter : 310