சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 நிலவரம் மற்றும் தடுப்பூசி வழங்கலின் முன்னேற்றம் குறித்து 9 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு

Posted On: 25 JAN 2022 3:59PM by PIB Chennai

"நாடு முழுவதும் கணிசமான எண்ணிக்கையிலான கொவிட்-19 நோயாளிகள் வீட்டுத் தனிமையில் குணமடைந்து வரும் நிலையில், பயனாளிகளுக்கு சரியான நேரத்தில் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்காக தொலை-ஆலோசனை சேவைகளை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியம்", என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா  கூறினார். 

ஜம்மு & காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், சண்டிகர், உத்தரகாண்ட், ஹரியானா, தில்லி, லடாக் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஒன்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின்  சுகாதார அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று உரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்தார். 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் மற்றும் நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால் முன்னிலையில் இந்தக்  கலந்துரையாடல் நடைபெற்றது. 

கொவிட்-19 நிலவரம் மற்றும் தடுப்பூசி வழங்கலின் முன்னேற்றம் குறித்து இந்த ஒன்பது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ‘ஹப் மற்றும் ஸ்போக்’ எனப்படும் மையம் மற்றும் ஆரங்கள் மாதிரியைப்  பின்பற்ற வேண்டும் என்றும் தொலை தொடர்பு மையங்கள் அதிகளவில் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

2.6 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இ-சஞ்சீவனி சேவைகளை வழங்க முடிந்துள்ளது என்றும், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெற முடியும் என்றும் அவர் கூறினார். 

“இந்த மையங்கள் 24X7 என்ற நிலையில் எப்போதும் செயல்படுவதை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உறுதிசெய்து, பொது மக்கள் மற்றும் சுகாதார நிபுணர்களுக்குத்  தேவையான வசதிகளை வழங்க வேண்டும்,” என்று அமைச்சர் கூறினார். தேசிய வழிகாட்டுதல்களின்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திறமையாகக் கண்காணிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை  அவர் அறிவுறுத்தினார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792498 

**********



(Release ID: 1792534) Visitor Counter : 154