பிரதமர் அலுவலகம்

மாவட்ட ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடியபோது பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 22 JAN 2022 3:18PM by PIB Chennai

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருக்கு வணக்கம்!

நண்பர்களே,மற்றவர்களின் விருப்பங்கள் உங்களின் விருப்பங்களாக மாறும் போதும், மற்றவர்களின் கனவுகள் நிறைவேறுவது உங்கள் வெற்றியின் அளவுகோலாக மாறும் போதும் கடமையின் பாதை வரலாற்றை உருவாக்குகிறது. நாட்டில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் இந்த வரலாற்றை உருவாக்கியிருப்பதை இன்று நாம் காண்கிறோம்.
 
முன்னேற விரும்பும் மாவட்டங்கள் கடந்த காலத்தில்  பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பின்தங்கியிருப்பதற்கு வழிவகுத்து விட்டது. ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பெறுவதற்காக சிறந்த உதவி முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் தடைகளாக இருந்தவற்றை முன்னேற விரும்பும் மாவட்டங்கள் அகற்றி விட்டன. முன்னேற விரும்பும் மாவட்டங்கள் தடைகள் என்பதற்கு பதிலாக வேகத்தை அதிகப்படுத்துபவையாக மாறியிருக்கின்றன. முன்னேற விரும்பும் மாவட்டங்களின் இயக்கங்கள் காரணமாக விரிவாக்கமும், வடிவ மாற்றமும் ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி உணர்வு, மத்திய, மாநில, உள்ளாட்சி நிர்வாக கூட்டுப்பணி அடிப்படையிலான அரசியல் சட்டத்தின் கலாச்சாரம் ஆகியவற்றின் வலுவான வடிவத்தை இது வழங்கியிருக்கிறது.
 முன்னேற விரும்பும் மாவட்டங்களின் மேம்பாட்டிற்கு நிர்வாகத்திற்கும், பொது மக்களுக்குமிடையே நேரடியான, உணர்வுப்பூர்வமான தொடர்பு இருப்பது மிகவும் முக்கியமானது. நிர்வாகத்தின் ஓட்டத்தில் மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்பது ஒருவகையாகும். இந்த இயக்கத்தின் முக்கியமான அம்சம் தொழில்நுட்பமும புதிய கண்டுபிடிப்பும் ஆகும். முன்னேற விரும்பும் மாவட்டங்களில் நாட்டின்  வெற்றிக்கான முக்கிய காரணம் ஒருங்கிணைப்பு.  அனைத்து ஆதாரங்களும் ஒன்றே, அரசு நிர்வாகம் ஒன்றே, அலுவலர்கள் ஒன்றே ஆனால் விளைவுகள் வேறுபட்டவை.
 
முன்னேற விரும்பும் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஜன்தன் கணக்குகள் 4-5 மடங்கு அதிகரித்துள்ளன. ஏறத்தாழ எல்லாக்  குடும்பத்திலும்  ஒரு கழிப்பறை இருக்கிறது. அனைத்து கிராமத்தையும் மின்சாரம் சென்றடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கையில் புதிய சக்தி ஊட்டப்பட்டுள்ளது. சிரமமான வாழ்க்கை காரணமாக  முன்னேற விரும்பும் மாவட்டங்களில் மக்கள் கடின உழைப்பாளிகளாக, துணிச்சல் உள்ளவர்களாக, எந்த அபாயத்தையும் எதிர்கொள்ள முடிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த பலம்  அங்கீகரிக்கப்பட வேண்டும்.

நண்பர்களே, சுதந்திரத்தின் 75-வது ஆண்டு காலத்தில் சேவைகள் மற்றும் வசதிகளை நூறு சதவீதம் நிறைவேற்றுவது நாட்டின் இலக்காகும். இதுவரை நிகழ்த்தப்பட்ட  சாதனைகளோடு ஒப்பிடும் போது மேலும் பெரிய அளவு சாதிப்பதற்கு நீண்ட தூரம் நாம் செல்லவேண்டியிருக்கிறது. இந்த மாவட்டங்களின் அனைத்து கிராமங்களுக்கும் சாலைகள், ஒவ்வொருவருக்கும் ஆயுஷ்மான் அட்டைகள், வங்கி கணக்கு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு, காப்பீடு, ஓய்வூதியம், ஒவ்வொருவருக்கும் வீட்டுவசதி  ஆகியவற்றை கால வரம்பிற்கு உட்பட்ட இலக்குகளாக நிர்ணயிக்க வேண்டும்.  சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அடுத்த 3 மாதங்களில் நிறைவு செய்யும் பத்துப்  பணிகளை ஒவ்வொரு மாவட்டமும் கண்டறிய வேண்டும். அதே போல் வரலாற்று சிறப்புமிக்க இந்த சகாப்தத்தில், வரலாற்று  சிறப்புமிக்க வெற்றிகளை  எட்டுவதற்கு சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவுடன் இணைந்த ஐந்து பணிகளையும் மேற்கொள்ளலாம் .

டிஜிட்டல் இந்தியா வடிவத்தில் அமைதிப்புரட்சியை நாடு கண்டு வருகிறது. இதில் எந்த மாவட்டமும் பின்தங்கிவிடக்கூடாது.அனைத்து கிராமங்களையும் டிஜிட்டல் கட்டமைப்பு சென்றடைவது முக்கியம். இதன் பொருள் சேவைகளும், வசதிகளும் ஒவ்வொரு  வீட்டுக்கும் செல்லும் என்பதாகும்.
  வளர்ச்சியில் அவ்வளவாக பின்தங்கி இல்லாத ஆனால் ஒன்று அல்லது இரண்டு அம்சங்களின் பலவீனமாக உள்ள 142 மாவட்டங்களின் பட்டியலை அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தயாரிக்க வேண்டும். முன்னேற விரும்பும் மாவட்டங்கள் விஷயத்தில் செய்த அதே போன்ற கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவது அவசியம். அனைத்து அரசுகளுக்கும்- மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், அரசு எந்திரம்- என அனைவருக்கும் இது புதிய சவால் ஆகும். நாம் ஒருங்கிணைந்து இந்தச்  சவாலை சமாளிக்க வேண்டியுள்ளது.
 
குடிமைப் பணியாளர்கள் தங்கள் சேவையின் முதலாவது நாளையும், ஆர்வத்தையும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டுக்கு சேவை செய்யும் உணர்வுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்.

********



(Release ID: 1792200) Visitor Counter : 190