வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

தச்சுத்தொழில் - வடகிழக்கு கவுன்சிலின் கீழ் செயல்படும் சங்கத்தின் சுயசார்பு முன்முயற்சி

Posted On: 23 JAN 2022 9:11AM by PIB Chennai

வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சகத்தின் வடகிழக்கு குழுவின் பதிவுபெற்ற வடகிழக்கு சமுதாய வள மேலாண்மை சங்கத்தின் சுயசார்பு முன்முயற்சியாக தச்சுத்தொழில் விளங்குகிறது.

 

சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள கொச்சிஜங் கிராமத்தை சேர்ந்த திரு மங்க்மின்லுன் சிங்க்சித்தும் அவரது குடும்பமும் ஏழ்மையின்  காரணமாக மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் தச்சுத் தொழிலை அவர் அறிந்திருந்தது அவருக்கு கை கொடுத்தது.

 

நகரத்தில் உள்ள மிகப்பெரிய தச்சுப் பட்டறை ஒன்றில் ஒரு நாளைக்கு ரூபாய் 300 கூலிக்கு வேலை செய்து குடும்பத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இன்னல்களை அனுபவித்த அவர், வடகிழக்கு சமுதாய வள மேலாண்மை சங்கத்தின் நெர்கார்ம் திட்டத்தின் பகுதி மூன்றின் கீழ் ரூபாய் 18,000 நிதி உதவி பெற்றார். 

 

அதைக் கொண்டு தனது தச்சுப்பணிக்கு தேவையான உபகரணங்களை வாங்கிய அவர், தொடர் வருமானம் வரும் வகையில் தொழிலை மேற்கொண்டதோடு, அவரது குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791872

****



(Release ID: 1792027) Visitor Counter : 156