கலாசாரத்துறை அமைச்சகம்
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி விழாவுக்கு கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு
Posted On:
23 JAN 2022 11:34AM by PIB Chennai
இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தினம், அதன் பெருமைமிகு மக்களின் வரலாறு, கலாச்சாரம், சாதனைகளைக் குறிக்கும் வகையிலான, விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாளை தேசிய பெண் குழந்தைகள் தினம் குறித்த ‘உமாங்’ என்னும் ரங்கோலி அலங்காரம் செய்யும் விழாவுக்கு கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழுக்கள், சாலைகள் மற்றும் சதுக்கங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரங்கோலி அலங்காரங்களைச் செய்ய வேண்டும். அவற்றுக்கு பெண் விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்லது நாட்டின் பெண் முன்னோடிகளின் பெயர்களைச் சூட்ட வேண்டும். நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ரங்கோலி அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம், பெண் குழந்தைகள் தினம், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாட ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்.
****
(Release ID: 1791974)
Visitor Counter : 275