பாதுகாப்பு அமைச்சகம்
2022 குடியரசு தின முகாமில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படையினருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் காணொலி மூலம் கலந்துரையாடினார்
Posted On:
22 JAN 2022 2:27PM by PIB Chennai
2022 குடியரசு தின முகாமில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படையினருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். தேசிய மாணவர் படையில் பங்கேற்றுள்ள இளைஞர்களை பல துறைகளிலும் திறமை மிக்கவர்களாகவும், அனைத்திற்கும் மேலாக மனித நேயம் கொண்டவர்களாகவும், முழுமையான சிறந்த மனிதர்களாகவும் இந்த அமைப்பு மாற்றிவருவது குறித்து அவர் பாராட்டினார். என்சிசி தனது மாணவர்களுக்கு புதிய பாதையைத் தேர்வு செய்து, சமுதாயத்திற்கு புதிய திசையைக் காட்டும் நற்பண்புகளை ஊட்டிவருவதாக அவர் புகழாரம் சூட்டினார். என்சிசி தனது மாணவர்களுக்கு ஒழுங்கைக் கற்பித்து, நாட்டு நிர்மாணத்தில் சிறப்பாகப் பங்கேற்கச் செய்துள்ளதாக அவர் கூறினார்.
பிராந்தியம், மதம், சாதி, வகுப்பு பிரிவினைகளை கைவிட்டு, நாட்டின் முன்னேற்றம் என்னும் புதிய உதயத்துக்காக சேவையாற்ற வேண்டும் என்று தேசிய மாணவர் படையினரை பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார். ஆண்,பெண் பாகுபாடு அற்ற சமத்துவத்தை உருவாக்குவது அவசியம் என அவர் கூறினார். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப, இந்திய பாரம்பரியங்களில் சமரசம் செய்து கொள்ளாமல் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
‘ நீங்கள் சிங்கங்கள், நீங்கள் தூய்மையான, முடிவற்ற, முறையான ஆன்மாக்கள். பிரபஞ்சத்தின் ஆற்றல் உங்களுக்குள் உள்ளது’ என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியைக் குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், என்சிசி மாணவர்கள், பெரிதாக கனவு கண்டு, தடைகளை தவிடுபொடியாக்கி, இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மிகவும் உயரிய, புதியவற்றை உருவாக்கி நாட்டை பெருமிதம் கொள்ளச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791758
****
(Release ID: 1791784)
Visitor Counter : 211