வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சுதந்திரத்தின் 75-வது ஆண்டை ஒட்டி 75 வாரங்களில் 75 யூனிகார்ன் ( மிகவும் விரும்பத்தக்க ஆனால் காணவோ அல்லது பெறவோ கடினமான ) நிறுவனங்களை உருவாக்க நாம் இலக்கு நிர்ணயிப்போம்: திரு பியுஷ் கோயல்

Posted On: 21 JAN 2022 2:40PM by PIB Chennai

சுதந்திரத்தின் 75-வது ஆண்டை ஒட்டி 75 வாரங்களில் 75 யூனிகார்ன் ( மிகவும் விரும்பத்தக்க ஆனால் காணவோ  அல்லது பெறவோ  கடினமான ) நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய தொழில்துறைக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று அழைப்பு விடுத்தார். 

 

“2021 மார்ச் 12 அன்று விடுதலையின் அமிர்தப் பெருவிழா தொடங்கியதில் இருந்து 45 வாரங்களில் 43 யூனிகார்ன்களை நாம் உருவாக்கியுள்ளோம். சுதந்திரத்தின் 75-வது ஆண்டை ஒட்டி 75 வாரங்களில் 75 யூனிகார்ன் நிறுவனங்களையாவது உருவாக்க இலக்கு நிர்ணயிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

 

'நாஸ்காம் டெக் ஸ்டார்ட் அப்' அறிக்கை 2020-ஐ வெளியிட்டு பேசிய அமைச்சர், ஸ்டார்ட்அப் இந்தியா ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புரட்சியைத் தொடங்கியதாகவும், இன்று ‘ஸ்டார்ட்அப்’ என்பது பொதுவான சொல்லாக மாறிவிட்டது என்றும் கூறினார். இந்திய ஸ்டார்ட்அப்கள், இந்தியா தொழில்துறை வளர்ச்சிக் கதையின் கதாநாயகர்களாக  வருகின்றன, என்றார் அவர்.

 

பெருந்தொற்றுக்கு முந்தைய அளவை விட அதிக முதலீடுகளை இந்திய ஸ்டார் அப் நிறுவனங்கள் ஈர்த்துள்ளதாக அவர் கூறினர். கடந்த ஆண்டில் சாதனை அளவில் சேவைகள் ஏற்றுமதிக்காக,வணிகச் செயல்முறைகளை  வெளி ஓப்பந்தங்கள் மூலம் பெரும்  பிசினஸ் ப்ரோஸ்ஸ்ஸ்ஸ் அவுட்சோர்சிங் (பிபிஓ) துறை உள்ளிட்ட தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள் (ஐடிஈஎஸ்) துறையை திரு கோயல் பாராட்டினார்.

 

புதுமைகளுக்கான கலாச்சாரத்தை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஜனவரி 16-ம் தேதியை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார் என்று திரு கோயல் கூறினார்.

 

ஒரு வாரத்திற்கு முன்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடனான பிரதமரின் உரையாடல், நமது புதுமையாளர்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791456

                                                                                *********************

 (Release ID: 1791577) Visitor Counter : 134


Read this release in: Telugu , Urdu , English , Malayalam