மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேர்வு குறித்த ஆலோசனை கூட்டத்துக்கான பதிவு தேதி ஜனவரி 27ம் தேதி வரை நீட்டிப்பு

प्रविष्टि तिथि: 20 JAN 2022 6:42PM by PIB Chennai

தேர்வு குறித்த ஆலோசனை பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  பிரதமர் திரு நரேந்திர மோடி உருவாக்கிய தேர்வு குறித்த ஆலோசனை நிகழ்ச்சியில், நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். தேர்வு குறித்த  அச்சத்திலிருந்து  வெளிவந்து அவற்றை விழாவாக கொண்டாடுவதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

 

இந்நிகழ்ச்சி கடந்தாண்டை போல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.  9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள், ஆன்லைன் போட்டி மூலம் இந்நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படுவர். இதற்கான பதிவுகள் https://innovateindia.mygov.in/ppc-2022/  என்ற இணையளத்தில் கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் தொடங்கி  வரும் ஜனவரி 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

                                                                                                ******************

 


(रिलीज़ आईडी: 1791278) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati