ஊரக வளர்ச்சி அமைச்சகம்

வேளாண் ஊட்டச்சத்து தோட்ட வாரத்தை கொண்டாடியது தீன்தயாள் அந்தியோதயா தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் : ஒரே வாரத்தில் 76,664 தோட்டங்கள் அமைக்கப்பட்டன

Posted On: 20 JAN 2022 5:31PM by PIB Chennai

வேளாண் ஊட்டச்சத்து தோட்ட வாரத்தை கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீன்தயாள் அந்தியோதயா தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் கடைபிடித்தது.  இதன் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் வேளாண் ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டன. குடும்பத்தின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்ற, ஒவ்வொரு ஊரக வீடுகளிலும் வேளாண் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்கு இத்திட்டம் ஆதரவு அளிக்கிறது. கூடுதல் உற்பத்தியை விற்பனை செய்து வருவாயை பெருக்க முடியும்.

 

ஊரக பொருளாதாரத்தை வலுப்படுத்தும், பிரதமரின்  தொலை நோக்கு மற்றும் தற்சார்பு இந்தியாவுக்கு அவர் விடுத்த அழைப்புக்கு ஏற்படி, ஊரக இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய, இந்திய ஊரகப் பகுதிகளில் 78 லட்சத்துக்கும் மேற்பட்ட வேளாண் ஊட்டச்சத்து தோட்டங்களை அமைப்பதற்கான வழியை ஊரக இந்தியா காட்டுகிறது.  இலக்கு அளவான 7,500-ஐ தாண்டிமொத்தம் 76,664 வேளாண் ஊட்டச்சத்து தோட்டங்கள் இந்த வாரத்தில் அமைக்கப்பட்டன.

 

இந்த நடவடிக்கை ஊரக பகுதிகளில், ஊட்டச்சத்து விழிப்புணர்வை அதிகரிக்க உதவியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி 13ம் தேதி இணையகருத்தரங்கும் நடந்தது. இதில் 700 இடங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

வேளாண் ஊட்டச்சத்து தோட்டங்கள் மூலம், ரசாயண கலப்பு அல்லாத காய்கறி-பழங்கள் கிடைப்பதாகவும், இதன் மூலம் மருத்துவ செலவு குறைந்துள்ளதாகவும், இதில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791234

                                                                                *************************

 (Release ID: 1791268) Visitor Counter : 226