அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வடகிழக்கு மாநிலங்களுக்கான நடமாடும் கோவிட் பரிசோதனை மையம்: மிசோரமில் தொடங்கிவைத்தார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்

Posted On: 20 JAN 2022 4:49PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்களுக்கான நடமாடும் கோவிட் பரிசோதனை மையத்தைமிசோரமில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தொடங்கிவைத்தார். இதில் மாநில முதல்வர் பூ ஜோரம்தங்கா கலந்து கொண்டார். முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் பரிசோதனை ஆய்வுமையம் (-லேப்ஆர்டி-பிசிஆர் மற்றும்  ரத்த (எலிசா) பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் திறன் படைத்தது.

இது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:மத்திய அரசின் உயிரிதொழில்நுட்பத்துறை உதவியுடன் இந்த பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகள் மற்றும் வடகிழக்கின் தொலை தூரப் பகுதிகளில் கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இந்தப் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்டி-பிசிஆர் மற்றும் இரத்த பரிசோதனைகளையும் மேற்கொள்ள முடியும்.

கொரோனா  முடிந்தபின்பும் டி.பி., எச்ஐபி மற்றும் இதர தொற்று நோய்களுக்கான பரிசோதனைகளையும் இந்த நடமாடும் பரிசோதனை மையம் மூலம் மேற்கொள்ள முடியும்.

தற்போதைய  கொரோனா தொற்றுச்  சூழலிலிருந்து  நாடு வெற்றிகரமாக மீளும். கோவிட் நிலவரத்தை பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தினந்தோறும் கண்காணித்து கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்

வடகிழக்கு பகுதி மக்களுக்காக இந்த -லேப்- தொலைதூர மருத்துவ ஆலோசனை மையத்துடன் இணைக்க வேண்டும். இந்தப் பரிசோதனை மையத்தில் எக்ஸ்ரே, கண்பார்வை பரிசோதனை போன்ற வசதிகளையும் இணைக்க முடியும். இது வடகிழக்குப்  பகுதி மக்களுக்கு மிகுந்த பலனை அளிக்கும்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதற்கு இந்த பரிசோதனை மையம்தான் சான்று. வடகிழக்கின் இதர மாநிலங்களிலும்  இந்த நடமாடும் பரிசோதனை மையம் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791215

----



(Release ID: 1791252) Visitor Counter : 235