சுரங்கங்கள் அமைச்சகம்
2021 நவம்பரில் கனிம உற்பத்தி 5% அதிகரிப்பு
Posted On:
20 JAN 2022 3:49PM by PIB Chennai
சுரங்கம் மற்றும் குவாரி துறைகளின் கனிம 2021 நவம்பர் மாதத்திற்கான உற்பத்திக் குறியீடு (அடிப்படை: 2011-12=100), 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 5.0 சதவீதம் உயர்ந்துள்ளது. 2021-22 ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய வருடத்துடன் ஒப்பிடும்போது 18.2 சதவீதமாக இருந்தது.
2021 நவம்பர் மாதத்தில் முக்கிய தாதுக்களின் உற்பத்தி அளவு வருமாறு:
நிலக்கரி 679 லட்சம் டன்கள், பழுப்பு நிலக்கரி 33 லட்சம் டன்கள், இயற்கை எரிவாயு (பயன்படுத்தப்பட்டது) 24 மில்லியன் கியூபிக் மீட்டர், பெட்ரோலியம் (கச்சா) 26 லட்சம் டன்கள், பாக்சைட் 1710 ஆயிரம் டன்கள், குரோமைட் 259 ஆயிரம் டன்கள், திட தாமிரம். 132 ஆயிரம் டன்கள் , தங்கம் 113 கிலோ, இரும்புத் தாது 194 லட்சம் டன்கள், திட காரீயம் 30 ஆயிரம் டன்கள், மாங்கனீஸ் தாது 224 ஆயிரம் டன்கள், திட துத்தநாகம். 132 ஆயிரம் டன்கள், சுண்ணாம்பு 303 லட்சம் டன்கள், பாஸ்போரைட் 122 ஆயிரம் டன்கள், மக்னசைட் 8 ஆயிரம் டன்கள் மற்றும் வைரம் 15 காரட்.
2020 நவம்பர் உடன் ஒப்பிடும்போது 2021 நவம்பர் மாதத்தில் நேர்மறை வளர்ச்சியை காட்டும் முக்கிய தாதுக்களின் உற்பத்தி வருமாறு:
தங்கம் (37.8%), மக்னசைட் (28.1%), இயற்கை வாயு (பயன்படுத்தப்பட்டது) (23.6%), குரோமைட் (21.9%), பழுப்பு நிலக்கரி (14.7%), திட காரீயம் (14.4%), திட துத்தநாகம் (13.9%) மற்றும் நிலக்கரி (8.5%).
எதிர்மறை வளர்ச்சியை காட்டும் முக்கிய தாதுக்கள் பின்வருமாறு:
பெட்ரோலியம் (கச்சா) (-2.2%), இரும்பு தாது (-2.4%), சுண்ணாம்பு (-8.7%), பாக்சைட் (-9.5%), பாஸ்போரைட் (-9.8%) மற்றும் மாங்கனீஸ் தாது (-15.2%)
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791201
----
(Release ID: 1791226)
Visitor Counter : 252