ஜல்சக்தி அமைச்சகம்
2024-ம் வருடத்திற்குள் அசாமின் அனைத்து வீடுகளிலும் குடிதண்ணீர் குழாய் இணைப்புகள்
Posted On:
19 JAN 2022 5:58PM by PIB Chennai
அசாமில் ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து அம்மாநில தலைமை செயலாளர் திரு ஜிஷ்ணு பருவா-உடன் மத்திய குடிநீர் மற்றும் கழிவுநீர் துறையின் செயலாளர் திருமதி வினி மஹாஜன் இன்று ஆய்வு செய்தார்.
இரு முக்கிய திட்டங்கள் அசாமில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்த ஆய்வின் போது கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதில் அசாம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருமதி மகாஜன் பாராட்டு தெரிவித்தார்.
"2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீரை குழாய் மூலம் வழங்கும் இலக்கை எட்டுவதற்கு அசாம் தயாராக உள்ளது. மாநிலம் இந்த இலக்கை எட்டுவதற்கான அனைத்து உதவியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது," என்று அவர் கூறினார்.
தூய்மை இந்தியா இயக்கம் குறித்து பேசிய திருமதி மகாஜன், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத இடங்களாக அனைத்து மாவட்டங்களும் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளதைக் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், "ஆனால், இது ஒருமுறை முயற்சி அல்ல. சமூக மற்றும் பழக்கவழக்க மாற்றங்களை உருவாக்க தொடர் முயற்சிகள் தேவை," என்று கூறினார்.
மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆகஸ்ட் 15, 2019 அன்று ஜல் ஜீவன் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, மாநிலத்திலுள்ள 63.35 லட்சம் வீடுகளில் வெறும் 1.11 லட்சம் (1.76 சதவீதம்) வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் இருந்தது. சுமார் இருபத்தி எட்டு மாதங்களில் 17.46 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791028
********
(Release ID: 1791042)
Visitor Counter : 268