மத்திய அமைச்சரவை
குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
19 JAN 2022 3:35PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் (01.03.2020 முதல் 31.08.2020 வரை) வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுகட்ட கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு ரூ.973.74 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பலன்கள்:
பெருந்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட மனஅழுத்தத்திலிருந்து சிறு கடன்தாரர்கள் மீண்டெழ உதவும் வகையில், அவர்கள் தவணை தவறிய கடன் சலுகையை பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் உதவும் விதமாக இந்த ஊக்கத்தொகை பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் மூலம் இதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.973.74 கோடியிலிருந்து கீழ் காணும் கடன் பெற்றவர்கள் பயனடையத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
- ரூ.2 கோடி வரையிலான குறு,சிறு, நடுத்தர தொழில் கடன்கள்
- ரூ.2 கோடி வரையிலான கல்விக் கடன்கள்
- ரூ.2 கோடி வரையிலான வீட்டுவசதிக் கடன்
- ரூ.2 கோடி வரையிலான நுகர்வோர் பயன்பாட்டு பொருள் கடன்
- ரூ.2 கோடி வரையிலான கிரெடிட் கார்டு தவணைகள்
- ரூ.2 கோடி வரையிலான வாகனக் கடன்கள்
- ரூ.2 கோடி வரையிலான தனிநபர் கடன்கள்
- viii. ரூ.2 கோடி வரையிலான நுகர்வுக் கடன்கள்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790935
***************
(Release ID: 1790957)
Visitor Counter : 337
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam