அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பிரிக்ஸ் எஸ்டிஐ வழிகாட்டும் குழு கூட்டத்தில் 2022-ஆம் ஆண்டின் நடவடிக்கைகள் குறித்து விவாதம்: இந்தியா 5 நிகழ்ச்சிகளை நடத்துகிறது
Posted On:
18 JAN 2022 4:07PM by PIB Chennai
2022-ஆம் ஆண்டில், பிரிக்ஸ் நாடுகள் கலந்து கொள்ளும் பிரிக்ஸ் ஸ்டார்ட் அப் அமைப்புக் கூட்டம் எரிசக்தி, உயிரி தொழில்நுட்பம், உயிரி மருத்துவம் குறித்த பணிக்குழுக்களின் கூட்டங்கள், ஐசிடி மற்றும் உயர்திறன் ஒருங்கிணைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், புத்தாக்கம், தொழில்முனைவு கூட்டாண்மை, பணிக்குழுக் கூட்டம் ஆகியவற்றை இந்தியா நடத்தவுள்ளது. பிரிக்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் புத்தாக்க வழிக்காட்டுதல் குழுவின் 15-வது கூட்டம் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. இதில் 2022-ஆம் ஆண்டுக்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் அறிவியல் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதரக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்திய தரப்புக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆலோசகரும் சர்வதேச ஒத்துழைப்புத் தலைவருமான திரு சஞ்சீவ் குமார் வர்சினி தலைமை வகித்தார்.
2022-ஆம் ஆண்டில் மொத்தம் 25 நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் ஐந்து நிகழ்ச்சிகளை இந்தியா நடத்தும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790712
------
(Release ID: 1790738)