தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய அஞ்சலக வங்கி வாடிக்கையாளர் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது

Posted On: 18 JAN 2022 2:47PM by PIB Chennai

நாட்டில் அனைவருக்கும் நிதி சேவை என்ற மிகப் பெரிய முன்முயற்சியை மேற்கொண்டு பிரதமர் தொடங்கிய முதலாவது டிஜிட்டல் வங்கி சேவையான இந்திய அஞ்சலக வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது.

3 ஆண்டு காலத்தில் இந்த எண்ணிக்கையை அடைந்துள்ள வங்கி வேகமாக வளர்ந்து வருவதாக தொலைத் தொடர்புத்துறை  தெரிவித்துள்ளது.

காகிதமற்ற சேவையை அளித்து வரும் அஞ்சலக வங்கி, 1.36 லட்சம் அஞ்சலகங்களில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 1.20 லட்சம் கிராமப்புறங்களில் உள்ளன. நாட்டில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் அஞ்சலக ஊழியர்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அடிமட்ட அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை இந்த வங்கி கொண்டு சேர்த்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790686

-------(Release ID: 1790709) Visitor Counter : 195