ஜவுளித்துறை அமைச்சகம்

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் சிறப்பு இழைகள் மற்றும் புவிசார் ஜவுளி துறைகளில் 20 திட்டங்களுக்கு ஜவுளி அமைச்சகம் அனுமதி

Posted On: 17 JAN 2022 6:33PM by PIB Chennai

சிறப்பு இழைகள் மற்றும் புவிசார் ஜவுளி துறைகளில் ரூ. 30 கோடி மதிப்பிலான 20 திட்டங்களுக்கு மத்திய ஜவுளி அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தலைமையில் ஜவுளி அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. முதன்மைத் திட்டமான ‘தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் இந்த யுக்தி சார்ந்த ஆராய்ச்சி திட்டங்கள் உள்ளன .

20 ஆராய்ச்சி திட்டங்களில், 16 சிறப்பு இழைகள் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 சுகாதார திட்டங்கள், தொழில் மற்றும் பாதுகாப்பு துறையில் 4 திட்டங்கள், எரிசக்தி சேமிப்பில் 3 திட்டங்கள், ஜவுளிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் 3 திட்டங்கள், விவசாயத்தில் 1 மற்றும் புவிசார் துணிகள் (உள்கட்டமைப்பு) துறையில் 4 திட்டங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்திலும், குறிப்பாக சுகாதாரம், தொழில் மற்றும் பாதுகாப்பு துறை, எரிசக்தி சேமிப்பு, ஜவுளிக் கழிவு மறுசுழற்சி, வேளாண் மற்றும் உள்கட்டமைப்பில் ஒரு படிநிலையை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த அமர்வில் பல்வேறு முன்னணி இந்திய நிறுவனங்கள், சிறப்பு மையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் (ஐஐடிகள், டிஆர்டிஓ, பிடிஆர்ஏ) உள்ளிட்டவை பங்கேற்றன.

விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடையே உரையாற்றிய    திரு. பியூஷ் கோயல், “இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளியின் பயன்பாட்டுத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் வளர்ச்சிக்கு தொழில் மற்றும் கல்வித்துறை இணைப்பு அவசியம். கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் ஒருங்கிணைப்பை உருவாக்குவது காலத்தின் தேவை, என்றார்.

அதிக மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளில் சர்வதேச அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், நாட்டிற்கு மெகா ஆராய்ச்சி திட்டங்களை ஈர்ப்பதற்கு, அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என்றார்.

முன்னதாக, 26 மார்ச் 2021 அன்று ஜவுளி அமைச்சகத்தால் ரூ 78.60 கோடி மதிப்பிலான 11 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790539

***********



(Release ID: 1790554) Visitor Counter : 262


Read this release in: English , Urdu , Marathi , Hindi