மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சஹோதயா பள்ளி வளாகங்களின் 27-வது தேசிய வருடாந்திர மாநாட்டில் திரு. சுபாஸ் சர்க்கார் உரையாற்றினார்

Posted On: 17 JAN 2022 4:53PM by PIB Chennai

குவாலியரிலுள்ள சஹோதயா சமிதியில் சிபிஎஸ்இ-யால் ஏற்பாடு செய்யப்பட்ட சஹோதயா பள்ளி வளாகங்களின் 27-வது தேசிய வருடாந்திர மாநாடு 17 ஜனவரி 2022 அன்று காணொலி மூலம் தொடங்கியது. மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் முதன்மை விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வில் மத்திய கல்வி இணை அமைச்சர் திரு. சுபாஸ் சர்க்கார் கலந்து கொண்டார்.

மாநாட்டை காணொலி மூலம் நடத்த குவாலியரிலுள்ள சஹோதயா சமிதி  மேற்கொண்ட முயற்சிகளுக்கு திரு. சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு தெரிவித்தார். கல்வி குறித்து சுவாமி விவேகானந்தர் கூறியதை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், உண்மை, அறிவு மற்றும் முழுமையான வளர்ச்சியை நோக்கி மாணவர்களின் பயணம் இருக்க வேண்டும் என்றார்.

 

நிகழ்ச்சியில் பேசிய திரு.. சர்க்கார், அறிவு, ஒற்றுமை, கூட்டு சிந்தனை மற்றும் கலாச்சார பகிர்தலின் சக்தி குறித்து எடுத்துரைத்தார். கண்மூடித்தனமாக படித்தலில் இருந்து முழுமையான, ஒருங்கிணைந்த, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய கல்வி மீது கவனம் செலுத்தும் தேசிய கல்வி கொள்கை 2020, கலை மற்றும் விளையாட்டு மூலம் ஒருங்கிணைந்த கல்வியை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட திறன் சார்ந்த கல்வி முறை மீது கவனம் செலுத்தும் குறு-கற்றல் திட்டம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு கொண்டு செல்ல சிபிஎஸ்இ எடுத்து வரும் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டை விடுதலையின் அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வரும் தருணத்தில் சஹோதயா பள்ளி வளாகங்களின் 27-வது தேசிய வருடாந்திர மாநாடு நடைபெறுவது சிறப்பு பெறுகிறது என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790516



(Release ID: 1790537) Visitor Counter : 57