அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சிக்கு ஜம்மு காஷ்மீரின் பங்களிப்பாக ஊதா புரட்சி அமைந்துள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 16 JAN 2022 5:33PM by PIB Chennai

முதலாம் தேசிய ஸ்டார்ட் அப் தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம் என்று கூறிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு)புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு)பிரதமர் அலுவலகம்பணியாளர்பொதுமக்கள் குறைகள்ஓய்வூதியம்அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங்பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சிக்கு ஜம்மு காஷ்மீரின் பங்களிப்பாக ஊதா புரட்சி அமைந்துள்ளது என்றார்.

 

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவின் மூலமாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள வாசனை இயக்கம் குறித்து விளக்கிய அவர்இதன் மூலம் இந்தியாவில் ஊதா புரட்சி உருவாகி உள்ளதாக கூறினார்.

 

ஜம்முவில் உள்ள அதன் ஆய்வகமான இந்திய ஒருங்கிணைந்த மருந்துகள் நிறுவனத்தின் மூலம் லேவண்டர் பயிரை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு அறிமுகப்படுத்தியதாகக் கூறிய அமைச்சர்டோடாகிஷ்ட்வார்ரஜோரிரம்பன்புல்வாமா உள்ளிட்ட மாவட்டங்களில் இது பயிரிடப்படுவதாக கூறினார். வாசனைப் பொருள்/லாவண்டர் சாகுபடி வேளாண் ஸ்டார்ட் அப்பிற்கு குறுகிய காலத்தில் பிரபலமான விருப்பத் தேர்வாக உருவாகி உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

டோடா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கில்லானியில் வசிக்கும் பரத் பூஷன் எனும் இளைஞர் வெறும் 0.1 ஹெக்டேரில் சிஎஸ்ஐஆர் - ஐஐஐஎம் ஆதரவுடன் லாவண்டர் சாகுபடியை தொடங்கி இன்று இன்று அதிக நிலத்தில் அதை பயிரிட்டு உதாரணமாக உருவாகியிருப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். அவரை தொடர்ந்து அவரது மாவட்டட்தில் உள்ள 500 விவசாயிகள் லாவண்டருக்கு மாறியிருக்கின்றனர்.

 

விடுதலையின் அமிர்த பெருவிழாவை முன்னிட்டுவாசனை இயக்கத்தின் இரண்டாவது கட்டத்தை சிஎஸ்ஐஆர் தொடங்கியிருப்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790341

 

 

****



(Release ID: 1790353) Visitor Counter : 509