இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தீக்ஷா தாகர், யாஷ் கங்காஸ் ஆகியோர் ஒலிம்பிக் பதக்கத்திற்கான இலக்கு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்
Posted On:
13 JAN 2022 3:58PM by PIB Chennai
அரியானாவைச் சேர்ந்த தீக்ஷா தாகர் மையக்குழுவிலும், யாஷ் கங்காஸ் மேம்பாட்டுக் குழுவிலும் ஒலிம்பிக் பதக்கத்திற்கான இலக்குத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியாவுக்கும், சுனில் குமாருக்கும் வெளிநாட்டில் பயிற்சி பெற நிதியுதவிக்கு விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் இயக்கப் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மாஸ்கோவில் 26 நாள் பயிற்சி பெற ஏற்கனவே ரூ.7.53 லட்சம் அனுமதிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 27 அன்று தொடங்கப்பட்டு நடைபெறும் பயிற்சி முகாமுக்கு கூடுதலாக ரூ.1.76 லட்சம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்த வீரர் சுனில் குமார் ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் சிறப்பு பயிற்சி பெற ரூ.10.85 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789645
****
(Release ID: 1789672)
Visitor Counter : 290