மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தூய்மை பள்ளி விருது 2021- ஐ தொடக்கம்: பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்
Posted On:
12 JAN 2022 7:02PM by PIB Chennai
2021- 2022ம் ஆண்டுக்கான தூய்மை பள்ளி விருதை (ஸ்வச் வித்யாலயா புரஷ்கார்) மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு சுபாஷ் சர்க்கார் இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த விருதுக்கு பள்ளிகள் வரும் மார்ச் மாதம் வரை விண்ணப்பிக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை மற்றும் எழுத்தறிவு துறை செயலாளர் திருமதி அனிதா கர்வால் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் மற்றும் யுனிசெப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த விருதை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் திரு சுபாஷ் சர்க்கார், பள்ளியில் தண்ணீர், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். மாணவர்களின் ஆரோக்கியம், வருகை பதிவு, தேர்வு முடிவுகளில் இவை முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பள்ளிகளில் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள், பள்ளியில் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது என அவர் கூறினார். தண்ணீர், சுகாதார வசதியில் சிறப்பான பணிகளை செய்த பள்ளிகளை தூய்மை பள்ளி விருது அங்கீகரித்து ஊக்குவிப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த வசதிகள் மேம்படவும் உதவுவதாக திரு சுபாஷ் சர்க்கார் கூறினார்.
பள்ளிகளில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தூய்மை பள்ளி விருது (எஸ்விபி), கடந்த 2016-17ம் ஆண்டில் பள்ளி கல்வித்துறையால் தொடங்கப்பட்டது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் இந்த விருதை பெற தகுதியானதாகும். தண்ணீர், துப்புரவு, சோப்பு மூலம் கை கழுவுதல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு, பழக்க மாற்றம், திறன் மேம்பாடு மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட கொவிட்-19 தயார் நிலை என்ற 6 துணை பிரிவுகள் அடிப்படையில் ஆன்லைன் மற்றும் கைப்பேசி செயலி மூலம் பள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன. இவற்றின் தரமதிப்பீடு தானியங்கி முறையில் உருவாக்கப்படும். இந்த விருதுக்கு பள்ளிகள் 2022 மார்ச் மாதம் வரை விண்ணப்பிக்கலாம்.
ஐந்து நட்சத்திர தர மதிப்பீடு முறையில், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.
ஒட்டுமொத்த பிரிவில், இந்தாண்டு விருதுக்கு, தேசிய அளவில், 40 பள்ளிகள் தேர்வு செய்யப்படும். பள்ளிகளுக்கான விருது தொகையும் ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000-லிருந்து ரூ.60,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் முறையாக 6 துணைப் பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கான பரிசுத் தொகை பள்ளி ஒன்றுக்கு ரூ.20,000.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789429
************
(Release ID: 1789506)
Visitor Counter : 289