நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
முக்கிய சில்லரை விற்பனை சந்தைகளில் சமையல் எண்ணெய் விலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை குறைப்பு
प्रविष्टि तिथि:
11 JAN 2022 6:39PM by PIB Chennai
உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாததால், சமையல் எண்ணெய்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நாட்டில் பயன்படுத்தப்படும் 56 சதவீதம் முதல் 60 சதவீத சமையல் எண்ணெய்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. உலகளாவிய உற்பத்தி குறைவு காரணமாகவும், ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரி உயர்வு காரணமாகவும், சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலைகள், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் விலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
இதனால் விலையை குறைக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த ஓராண்டாக தொடர்ந்து அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலையை கட்டும் முயற்சியாக கச்சா பாமாயில், சோயாபீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய்களுக்கான அடிப்படை வரி 2.5 சதவீதம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்களுக்கான வேளாண் மேல்வரியும் 20 சதவீதத்திலிருந்து 7.5 சதவீமாக குறைக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான அடிப்படை வரி 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக சமீபத்தில் குறைக்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான அடிப்படை வரை 32.5 சதவீத்திலிருந்து 17.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சமையல் எண்ணெயின் சில்லரை விலைகளை குறைக்கும்படி எண்ணெய் நிறுவன சங்கங்களிடம் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
இதனால் நாடு முழுவதும் முக்கிய சில்லரை விற்பனை சந்தைகளில் சமையல் எண்ணெய் விலைகளை லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை பல எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789157
***********
(रिलीज़ आईडी: 1789261)
आगंतुक पटल : 325