பாதுகாப்பு அமைச்சகம்
கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் குணமடைந்து வருகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JAN 2022 6:29PM by PIB Chennai
தில்லி கண்டோன்மெண்ட் ராணுவ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, புதுதில்லியில் இன்று (11.01.2022) பரிசோதித்தினர். லேசான அறிகுறிகளுடன் கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் தற்போது வீட்டுத் தனிமையில் இருந்து வருகிறார். மருத்துவக் குழுவின் பரிசோதனையின்படி, திரு ராஜ்நாத் சிங், பாதிப்பிலிருந்து குணமடைந்து வருகிறார்.
கொவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் தாம் வீட்டுத் தனிமையில் இருந்து வருவதாக திரு ராஜ்நாத் சிங், ஜனவரி 10, 2022 அன்று தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789154
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1789189)
வருகையாளர் எண்ணிக்கை : 236