மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய புதுமையியல் மற்றும் ஸ்டார்ட் அப் சூழலியலுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் வலுவூட்டும்: திரு. ராஜ்குமார் ரஞ்சன் சிங்

Posted On: 11 JAN 2022 5:34PM by PIB Chennai

இந்திய புதுமையியல் மற்றும் ஸ்டார்ட் அப் சூழலியலுக்கு  வலுவூட்டும் சிறந்த செயல்திறன் நமது உயர்கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது என்று மத்திய கல்வி இணை அமைச்சர் திரு. ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறினார்.

கல்வி அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி குழு மற்றும் கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு ஆகியவை இணைந்து நடத்திய 'கல்வி நிறுவனங்களில் புதுமையியல் சூழலியலை கட்டமைத்தல்' எனும் காணொலி கருத்தரங்கில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தானையும் திரு சிங் தொடங்கி வைத்தார்.

புதிய மற்றும் தற்சார்பு மிக்க இந்தியாவை கட்டமைப்பதற்கான தமது லட்சியத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளிப்படுத்தி உள்ளதாக கூறிய அமைச்சர், ஆதரவான சூழலியல், அர்ப்பணிப்பு மற்றும் நமது புதுமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோரின் முயற்சிகளுடன் இதை சாதிக்க முடியும் என்றார். நமது பாரம்பரியம் மற்றும் நவீன உலகக் கண்ணோட்டத்தின் சிறந்தவற்றை கலந்து நாளைய இந்தியா உருவாக வேண்டும் என்று கூறினார்.

 உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்புகளில் ஒன்றையும் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட்அப் சூழலியலையும் நமது நாடு கொண்டிருப்பதாக திரு சிங் மேலும் தெரிவித்தார். அறிவு சார்ந்த பொருளாதாரமாக உருவாக நாம் விரும்புகிறோம், புதுமைக்கான தேடல் மற்றும் தொழில்முனைதல் நமது கல்வி நிறுவனங்களில் இல்லாவிட்டால் இது சாத்தியமாகாது என்று அவர் கூறினார்.

கல்வி நிறுவனங்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் உயர்தர ஆராய்ச்சி, புதுமைகள் மற்றும் தொழில்முனைதலை ஆதரிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தொழில்முனைதலை கொண்டாடி புதுமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டுவோர், நிதி வழங்கும் அமைப்புக்கள், வங்கிகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குபவர்களை ஒரே குடையின் கீழ் இந்த நிகழ்ச்சி கொண்டு வந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1789141

*************


(Release ID: 1789176) Visitor Counter : 134