அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்
Posted On:
10 JAN 2022 5:16PM by PIB Chennai
மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் நிலவும் குறிப்பிட்ட சிக்கல்கள் மற்றும் தேவைகளுக்கான தொழில்நுட்ப தீர்வுகளுக்கும் அறிவியல் சார்ந்த எதிர்வினைகளுக்கும் நெருக்கமான மத்திய மாநில ஒத்துழைப்பு தேவை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
புதுதில்லியில் உள்ள பிரித்வி பவனில் கலப்பு முறையில் நடைபெற்ற அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் உயர்மட்ட கூட்டத்திற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்.
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிசிரியர் கே விஜயராகவன், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம் ரவிச்சந்திரன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் எஸ் சந்திரசேகர், உயிரி தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, விண்வெளி துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே சிவன், அணுசக்தி செயலாளர் டாக்டர் கே என் வியாஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பொது மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதற்கும் தேவையான அறிவியல் தீர்வுகளை அடையாளம் காண்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
உதாரணத்திற்கு, சமீபத்திய பனி அகற்றுதல் தொழில்நுட்பம் ஜம்மு காஷ்மீரில் பயன்படுத்தப்படும் என்றும் கடற்கரையின் புத்தாக்கம் மற்றும் புதுப்பித்தலில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டிற்கு உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அடுத்த வாரம் முதல் மாநில அரசுகளுடன் தொடர் கூட்டங்கள் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788946
************
(Release ID: 1788998)
Visitor Counter : 221