ரெயில்வே அமைச்சகம்
அனைத்து ரயில்வே மண்டலங்கள் / கோட்டங்களில் கோவிட் ஆயத்த நிலை குறித்து ரயில்வே அமைச்சர் ஆய்வு
Posted On:
10 JAN 2022 5:14PM by PIB Chennai
நாட்டில் அண்மைக் காலமாக கோவிட் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் சுகாதார கட்டமைப்புகளை பொதுமக்களும் பயன்படுத்த அனுமதிக்குமாறு, அனைத்து ரயில்வே மண்டலம் மற்றும் கோட்டங்களில் பணியாற்றும் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு வி கே திரிபாதி, மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர்கள், அமைச்சகத்தின் உயரதிகாரிகளுடன் அனைத்து மண்டல ரயில்வே மற்றும் உற்பத்திப் பிரிவுகளின் பொது மேலாளர்கள் மற்றும் கோட்ட ரயில்வே மேலாளர்களும், காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவிட் ஆயத்த நிலை தொடர்பாக கீழ்காணும் அம்சங்கள் குறித்து திரு வைஷ்ணவ் ஆய்வு செய்தார்:
- ரயில்வே மருத்துவமனை கட்டமைப்புகள்
- குழந்தைகள் வார்டு செயல்பாடு
- தடுப்பூசி- ரயில்வே முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை உட்பட, குழந்தைகள் மற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவது
- மருந்துப் பொருட்கள், ஆக்சிஜன் விநியோகம், ஜியோ லைட் கையிருப்பு மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் மற்றும் திரவ மருத்துவ ஆக்சிஜன் டேங்குகளின் செயல்பாடு மற்றும் கோவிட் சிகிச்சைக்கு முக்கியமாக தேவைப்படும் சாதனங்கள்
- ஆக்சிஜன் உற்பத்தி பிரிவுகளை தொடங்குதல் (மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆக்சிஜன் ஆலைகளில், 78 ஏற்கனவே செயல்பாட்டிற்கு வந்துள்ளது, 17 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது)
- விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
- முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் இதர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரயில் நிலையங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகளை அதிகப்படுத்துதல்
- முகக் கவசமின்றி ரயில் நிலையங்களுக்குள் வருபவர்களை, அவற்றை அணிந்து வருமாறு அறிவுறுத்துதல்
- முகக்கவசம் அணிதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்தல்
- தற்போதைய கோவிட் அதிகரிப்பு காலத்தில் அவசர கால தேவைகளுக்காக சிறப்பு ரயில் நிலையங்களை ஏற்படுத்துதல்
போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788944
***************
(Release ID: 1788962)
Visitor Counter : 127