ரெயில்வே அமைச்சகம்
2021-ல் அதிக சரக்குகளைக் கையாண்டு தென்கிழக்கு ரயில்வே சாதனை
Posted On:
08 JAN 2022 1:15PM by PIB Chennai
சரக்குகளை அனுப்புவதிலும், வருவாய் ஈட்டுவதிலும், தென்கிழக்கு ரயில்வேக்கு 2021-ம் ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருந்தது. கடந்த ஆண்டு, தென்கிழக்கு ரயில்வே பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது..
1.ஹௌரா – மும்பை பிரதான வழித்தடத்தில் உள்ள அந்துல் -ஜர்சுகுடா பிரிவில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டது.
2.2020-21-ல் 175.54 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது, இது தென்கிழக்கு ரயில்வேயின் சரக்கு கையாளும் திறனில் மிக அதிகமாகும்.
3.2021ம் ஆண்டில் (நவம்பர் வரை) மொத்த வருவாய் 15079 கோடி என்பது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 14.86 சதவீதம் அதிகமாகும் .
4.9 ரயில்களின் பெட்டிகள், எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டன.
5.2021-ம் ஆண்டில் 32 லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டு, 16 இடங்களில் சுரங்கப் பாதைகளும், 5 இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
6.406.18 டி.கிலோமீட்டர் தொலைவுக்கான ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.
7.பயணிகளின் பாதுகாப்புக்காக 28 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
8தென் கிழக்கு ரயில்வே-யின் ராஞ்சி கோட்டத்தில், பெண் ஆர்.பி.எஃப். கமாண்டோக்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, தென் கிழக்கு ரயில்வேயில் பணியாற்றும் திருமதி.நிக்கி ப்ரதான், திருமதி. சல்மா தீதி (ஹாக்கி) மற்றும் திருமதி. சுதிர்தா முகர்ஜி(டேபிள் டென்னிஸ்) ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் பங்கேற்றனர். இந்த மண்டலத்தில் பணியாற்றும் திரு.ஜாவேத் அலி கான், உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்று, 2-ம் இடம் பெற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணலாம்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788535
***************
(Release ID: 1788587)
Visitor Counter : 319