உள்துறை அமைச்சகம்
பேரிடர் மேலாண்மை துறையில் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
06 JAN 2022 4:32PM by PIB Chennai
பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பேரிடர் மேலாண்மை செயல்முறைகளால் பயனடைவதோடு, பேரிடர் மேலாண்மைத் துறையில் தயார்நிலை, எதிர்வினை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த இயலும் .
பின்வரும் துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் அடிப்படையிலான ஒத்துழைப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது:
i. அவசரநிலைகளைக் கண்காணித்தல், முன்னறிவித்தல் மற்றும் விளைவுகளை மதிப்பீடு செய்தல்
ii. பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கிடையே, திறமையான அதிகாரிகள் மூலம் தொடர்பு
iii ஆராய்ச்சித் திட்டங்களின் கூட்டுத் திட்டமிடல், மேம்பாடு மற்றும் செயல்படுத்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகளின் பரிமாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளின் முடிவுகள்
iv. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எல்லைக்குள் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட தகவல், பருவ இதழ்கள் அல்லது வேறு ஏதேனும் வெளியீடுகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் , அத்துடன் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் பரிமாற்றம்
v. தொடர்புடைய துறைகளில் கூட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், மற்றும் பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்;
vi. பேரிடர் மேலாண்மையில் நிபுணர்கள் மற்றும் அனுபவங்களின் பரிமாற்றம்
vii. தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் முதலில் வருபவர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு; பேரிடர் மேலாண்மை துறையில் திறன் வளர்ப்பை எளிதாக்குவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் பரிமாற்றம்
viii. தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு பரஸ்பரம் ஒப்புக்கொண்டபடி உதவிகளை வழங்குதல், முன்னெச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பேரிடர் மேலாண்மையில் திறனை மேம்படுத்துதல்
ix. பரஸ்பரமாக ஒப்புக்கொண்டபடி, அவசரகால எதிர்வினையில் உதவி வழங்குதல்
x. பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் பரஸ்பர பகிர்வு
xi. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளின்படி பரஸ்பரம் ஒப்புக்கொண்டபடி தர மேலாண்மை அமைப்புகளை வழங்குதல்
xii பேரிடர் மேலாண்மை தொடர்பான பிற நடவடிக்கைகள், தகுதிவாய்ந்த அதிகாரிகளால் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்படலாம்
தற்போது வரை, சுவிட்சர்லாந்து, ரஷியா,, ஜெர்மனி, ஜப்பான், தஜிகிஸ்தான், மங்கோலியா, பங்களாதேஷ், இத்தாலி ஆகிய நாடுகள் மற்றும் சார்க் அமைப்புடனும் பேரிடர் மேலாண்மை துறையில் ஒத்துழைப்புக்கான இருதரப்பு / பலதரப்பு ஒப்பந்தம் / புரிந்துணர்வு ஒப்பந்தம் / கூட்டு ஒப்பந்தம் / ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788015
******************
(रिलीज़ आईडी: 1788139)
आगंतुक पटल : 541