எரிசக்தி அமைச்சகம்

500 மெகாவாட் மிதக்கும் சூரிய எரிசக்தி திட்டங்களுக்காக கெட்காலுடன் என்எச்பிசி ஒப்பந்தம்.

Posted On: 06 JAN 2022 3:21PM by PIB Chennai

இந்தியாவின் முதன்மையான நீர் மின்சார நிறுவனமான என்எச்பிசி  லிமிடெட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒடிசாவில் முன்னணி மாநில பொதுத்துறை நிறுவனமான கிரீன் எனர்ஜி டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் ஒடிசா லிமிடெட் (கெட்கால்) உடன் வெவ்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களில் 500 மெகாவாட் உற்பத்தி”-க்காக ப்ரமோட்டர்ஸ் ஒப்பந்தத்தில் 04 ஜனவரி 2022 அன்று கையெழுத்திட்டது .

ஒடிசா மாநில அமைச்சர் (எரிசக்தி) திரு. திப்யா ஷங்கர் மிஷ்ரா, என்எச்பிசி இயக்குநர் (திட்டங்கள்) திரு. பிஸ்வஜித் பாசு மற்றும் ஓஎச்பிசி, கிரிட்கோ, கெட்கால் மற்றும் என்எச்பிசி ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் என்எச்பிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. ஏ. கே. சிங் மற்றும் ஓஎச்பிசி தலைவரும் கெட்காலின் தலைவர் மற்று நிர்வாக இயக்குநருமான திரு. பிஷ்ணுபாத சேத்தி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். முன்னதாக என்எச்பிசி மற்றும் கெட்கால் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 20.07.2020 அன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், ஒடிசாவில் 500 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒரு நிறுவனத்தை கூட்டாக நிறுவுவதற்கு என்எச்பிசி மற்றும் கெட்கால் ஒப்புக்கொள்கின்றன. முன்மொழியப்பட்ட கூட்டு நிறுவனத்தில் என்எச்பிசி மற்றும் கெட்காலின் பங்குகள் 74:26 என்ற விகிதத்தில் இருக்கும். நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 500 கோடி ஆகவும், ஆரம்பத்தில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ 10 கோடி ஆகவும் இருக்கும்.

முதல் கட்டத்தில் 300 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி, ரெங்காலி ஹெச்.இ-யின் நீர்த்தேக்கத்தில் நிறுவப்படும். அல்ட்ரா மெகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சார பூங்கா, சோலார் பார்க் திட்டத்தின் 8-வது முனையின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டத்தின் முதல் கட்டத்தில் 2000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும், ஆண்டுக்கு சுமார் 600 எம்யூ மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

ஒடிசாவில் முதன்முறையாக செயல்படுத்தப்படும் இத்திட்டம்நாட்டிலேயே  பெரியதாகும். முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை இது உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி  மற்றும் கொள்முதலுக்கான  இலக்கை அடைய மாநிலத்திற்கு உதவும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787993

 

 



(Release ID: 1788060) Visitor Counter : 203