அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்

Posted On: 05 JAN 2022 4:35PM by PIB Chennai

தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று வெளியிட்டார்.

‘நீடித்த எதிர்காலத்திற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை என்பதே தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருளாகும்.

நிகழ்ச்சியின் போது பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய அரசில் உள்ள பல்வேறு அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தனித்தனியாக பணியாற்றுவதற்குப் பதிலாக பொதுவான கருப்பொருள்களில் கூட்டுத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

அறிவியல் விஷயங்களை பொதுமக்கள் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டு தேசிய அறிவியல் தினம் 2022-ன் மையப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும், முக்கியமான அறிவியல் தினங்களின் கொண்டாட்டங்கள் ஒரு நாள் நிகழ்வாக இருக்கக் கூடாது என்றும், தொடர் நிகழ்வுகளாக இவற்றை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நமது மிகப்பெரிய சொத்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார், அவர் அறிவியலின் மீது இயற்கையாகவே விருப்பம் கொண்டவர் மட்டுமல்ல, கடந்த 7-8 ஆண்டுகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஆதரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் சிறந்து விளங்குகிறார் என்றார். தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் இந்தியாவின் அறிவியல் திறன் முக்கியப் பங்காற்றப் போகிறது என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787693

***********

 



(Release ID: 1787821) Visitor Counter : 295