நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2021 டிசம்பரில் நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு.

Posted On: 05 JAN 2022 3:50PM by PIB Chennai

இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தி, 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில்,  2021ஆம் ஆண்டு டிசம்பரில் 6.74 சதவீதம் அதிகரித்து 74.78 மில்லியன் டன்னாக உயர்ந்தது.

கடந்தாண்டு டிசம்பரில் மொத்த நிலக்கரி உற்பத்தியில், நிலக்கரி இந்தியா நிறுவனம், 60.220 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது. இது 3.79 சதவீத வளர்ச்சி.

2019ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில், நிலக்கரி விநியோகம் கடந்தாண்டு டிசம்பரில் 14.62 சதவீதம் அதிகரித்து 75.05 மில்லியன் டன்னாக அதிகரித்தது.  நிலக்கரி இந்தியா நிறுவனம்(சிஐஎல்) 60.67 மில்லியன் டன் நிலக்கரியை விநியோகம் செய்தது. இது 12.70 சதவீத வளர்ச்சி. சிங்கரேனி கொலியரீஸ் நிறுவனம்(எஸ்சிசிஎல்)  5.70 மில்லியன் டன் நிலக்கரியை விநியோகம் செய்தது. இது 2.01 சதவீத வளர்ச்சி.

அனல் மின்சாரத்தின் தேவை 2021ம் ஆண்டு நவம்பரில் 12.7 சதவீதம் அதிகரித்தது. அனல் மின்சாரத்தின் உற்பத்தி கடந்தாண்டு டிசம்பரில் 11.84 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. 2021 டிசம்பரில் ஒட்டு மொத்த மின்சார உற்பத்தி, 2019 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 8.32 சதவீதம் அதிகம்.

அனல் மின்சாரத்தின் உற்பத்தி 2021 டிசம்பரில் 85,579 மில்லியன் யூனிட்.  இதற்கு முந்தைய மாத மின் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 13.17 சதவீத வளர்ச்சி. மொத்த மின்சார உற்பத்தி 2021 டிசம்பரில், 1,13,094 மில்லியன் யூனிட்டாக அதிகரித்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787667

*************


(Release ID: 1787774) Visitor Counter : 200


Read this release in: English , Urdu , Marathi , Hindi