இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
117 தடகள வீரர்களுக்கான தேசிய முகாமை மார்ச் 31 வரை நீட்டிக்க இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல்
Posted On:
05 JAN 2022 4:41PM by PIB Chennai
இந்த ஆண்டின் பிற்பகுதியில் பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஹாங்சூவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த 5 இடங்களில் 45 பயிற்சியாளர்களைக் கொண்டு 117 தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் தேசிய முகாமை வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
64 வீரர்கள், 53 வீராங்கனைகளுக்கு பாட்டியாலா, திருவனந்தபுரம், பெங்களுரு, புதுதில்லி, பாலுசேரி ஆகிய 5 இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஓட்டப் பந்தயம், தடையோட்டம், நடைபோட்டி, நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், மாரத்தான், சுத்தி எறிதல், ஹெப்பதலான் போன்ற போட்டிகளுக்கு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787695
(Release ID: 1787747)
Visitor Counter : 151