ரெயில்வே அமைச்சகம்

தெற்கு ரயில்வேயில் பகல் நேர எரிசக்தி தேவையை 100% ஈடுசெய்த முதலாவது ரயில் நிலையமாக டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் உள்ளது

தெற்கு ரயில்வேயை சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை பி.அனிதா இந்த ஆண்டு கவுரவமிக்க பத்மஸ்ரீ விருது பெற்றார்

Posted On: 05 JAN 2022 3:54PM by PIB Chennai

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை மேற்பகுதிகளில் 1.5 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டு பகல் நேர எரிசக்தி தேவையின் 100 சதவீதத்தையும் நிறைவு செய்து இந்த மண்டலத்தில் எரிசக்தி சேமிப்பு முயற்சிகளில் முதல் சான்றாக இந்த ரயில் நிலையம் மாறியுள்ளது. 10.5 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டு 70 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தேசிய அளவில் ரூ.38 கோடி சேமிப்புக்கு வழிவகுக்கிறது.

இரட்டை வகை ஷன்டிங் என்ஜின்கள் அறிமுகம் செய்யப்பட்டதால் டீசல் ஷன்டிங் என்ஜின்களின் தேவை அகற்றப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3.66 கோடி மிச்சமாகிறது. தற்போது தாம்பரத்திலும், பேசின் பாலத்திலும் 5 இரட்டை வகை ஷன்டிங் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கொவிட் பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணிகளின் ஒரு பகுதியாக பல்வேறு ரயில்வே மருத்துவமனைகளில் 10,285 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். பெரம்பூர் மருத்துவமனையில் புதிய கொவிட் பிரிவு உருவாக்கப்பட்டு 4241 நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

2023 டிசம்பருக்குள் தெற்கு ரயில்வேயை 100 சதவீதம் மின்மயமாக்கும் இலக்கை எட்டுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2021-ல் விருதாசலம் – கடலூர் துறைமுகம், நீடாமங்கலம் – மன்னார்குடி, பொள்ளாச்சி – போத்தனூர், மதுரை – மானாமதுரை, சேலம் – விருதாசலம் உட்பட 310 ரயில்வே கிலோ மீட்டர் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு சார்பிலான இந்திய பசுமை கட்டுமான கவுன்சில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு பிளாட்டினம் விருது வழங்கியுள்ளது. தேசிய எரிசக்தி சேமிப்பு விருது 2021 ஈரோட்டில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை பி.அனிதா 2021-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். தடகள வீராங்கனை ரேவதி வீரமணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்தது தெற்கு ரயில்வேக்கு பெருமிதம் அளித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787673

*****



(Release ID: 1787706) Visitor Counter : 347