எரிசக்தி அமைச்சகம்
தானியங்கி உற்பத்தி கட்டுப்பாட்டை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
Posted On:
04 JAN 2022 12:06PM by PIB Chennai
மத்திய மின்சாரம் மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர் கே சிங், திங்கட்கிழமை தானியங்கி உற்பத்தி கட்டுப்பாட்டை (ஏஜிசி) நாட்டுக்கு அர்ப்பணித்தார். 2030-ஆம் ஆண்டுக்குள் புதை படிமம் இல்லாத அடிப்படையிலான மின்சார உற்பத்தியை 500 ஜிகாவாட் அளவிலான இலக்கை எட்டுவதற்கு இது பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தானியங்கி கட்டுப்பாட்டை பவர் சிஸ்டம் ஆபரேஷன் கழகம், தேசிய மின் விநியோக மையத்தின் மூலம் இயக்கி வருகிறது. தானியங்கி கட்டுப்பாடு மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிர்வெண் அளவை பராமரிக்க நான்கு விநாடிகளுக்கு ஒருமுறை சமிக்ஞைகளை அனுப்பும்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஆர்.கே. சிங், அதிக அளவில், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை ஒருங்கிணைக்க இந்தியா தயாராகி வருவதாக கூறினார். அதிர்வெண் அளவை கட்டுப்படுத்தும் முக்கிய உபகரணங்களில் ஒன்று இந்த ஏஜிசியாகும் என்றார்.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 51 ஜிகாவாட் உற்பத்தித் திறன் அளவுக்கு அனைத்து 5 மண்டலங்களிலும் இயங்கி வருகிறது. இது இந்திய மின்சார உற்பத்தியை வலுப்படுத்தும் முக்கிய மைல் கல்லாகும்.
இந்திய மின்சார நடைமுறை குறித்த அறிக்கை ஒன்றையும் திரு ஆர் கே சிங் வெளியிட்டார். இது ஐஐடி பாம்பே-யின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை எட்டுவதை நோக்கிய நாட்டின் பயணத்தில் இதுவரை, பெரும் புனல்மின் திட்டங்கள் உட்பட 150 ஜிகாவாட் நிறுவு திறனை அடைந்துள்ளதாக திரு சிங் குறிப்பிட்டார். 63 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் கொண்ட பல்வேறு திட்டங்கள், கட்டுமானத்தில் உள்ளதாகவும், அடுத்த ஆண்டில் இவை நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1787341
-----
(Release ID: 1787408)
Visitor Counter : 271