நிதி அமைச்சகம்
2021 டிசம்பரில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ. 1,29,780 கோடி
प्रविष्टि तिथि:
01 JAN 2022 1:40PM by PIB Chennai
2021 டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,29,780 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.22,578 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.28,658 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.69,155 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.37,527 கோடி உட்பட) மற்றும் மேல் வரி (செஸ்) ரூ.9,389 கோடி (இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ.614 கோடி உட்பட) ஆகும்.
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.25,568 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.21,102 கோடியும், மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கு பின், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மொத்த வருவாய், டிசம்பர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.48,146 கோடி மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.49,760 கோடி.
கடந்த டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய், கடந்த ஆண்டு டிசம்பர் ஜிஎஸ்டி வருவாயைவிட 13 சதவீதம் அதிகம். 2019 டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாயைவிட 26 சதவீதம் அதிகம்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786774
****
(रिलीज़ आईडी: 1786784)
आगंतुक पटल : 586