வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் ஏற்றுமதி சீராக அதிகரிப்பு
प्रविष्टि तिथि:
31 DEC 2021 12:19PM by PIB Chennai
உலகளாவிய வர்த்தகத்தில் பல சவால்களை சந்தித்த போதிலும், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வோளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி சீராக வளர்ச்சியடைந்துள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி வாரியம்(அபெடா) மூலம் வேளாண் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2011-12ம் நிதியாண்டில் ரூ.83,484 கோடியாக இருந்த, உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 2020-21ம் ஆண்டில் ரூ.1,53,050 கோடியாக அதிகரித்துள்ளதாக வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குனரகம் (DGCI&S) தெரிவித்துள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத அரிசி முன்னணியில் உள்ளது. 2020-21ம் ஆண்டு மொத்த ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்காக அரிசி உள்ளது.
2020-21ம் ஆண்டில் அபெடா ஏற்றுமதியில் முதல் 3 பொருட்களில் பாஸ்மதி அல்லாத அரிசி (23.22 சதவீதம்) பாஸ்மதி அரிசி (19.44 சதவீதம்) மற்றும் எருமை இறைச்சி (15.34 சதவீதம்)ஆகும். இவை மூன்றும் மொத்த ஏற்றுமதியில் 58 சதவீதம் வகிக்கின்றன.
2020-21ம் ஆண்டில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதியின் மதிப்பு ரூ.35,477 கோடி. பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி ரூ.29,850 கோடி. எருமை இறைச்சி ஏற்றுமதி ரூ.23,460 கோடி.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786508
********
(रिलीज़ आईडी: 1786660)
आगंतुक पटल : 363