தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

2021-ல் உச்சத்தை எட்டிய தூர்தர்ஷன் புகழ்

Posted On: 31 DEC 2021 4:45PM by PIB Chennai

2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில் பிரசார் பாரதியின் தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவை நாடெங்கிலும் பல்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகளையும், செய்திகளையும் வெளியிட்டு நேயர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

2021-ம் ஆண்டில் தூர்தர்ஷனின் அலைவரிசைகள் நாடு முழுவதும் 6 பில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. 2021-ம் ஆண்டில் தூர்தர்ஷன் அலைவரிசைகள் 680 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.

190க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளனர். தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியின் யூடியூப் சேனல்கள் 2021-ல் 1 பில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த 94 மில்லியன் மணி நேரம் இவை பார்க்கப்பட்டுள்ளன.

தூர்தர்ஷனில் கொவிட்-19 தொடர்பான சமூக தகவல்கள் 95 மில்லியனுக்கும் மேற்பட்டோரை சென்றடைந்துள்ளது. பல்வேறு மொழிகளில் செய்திகளை 356 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். கொவிட் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் 43 மில்லியனுக்கும் மேற்பட்டோரை சென்றடைந்துள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786588

                                                        ****



(Release ID: 1786635) Visitor Counter : 181