வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுவின் வெற்றிக்கதை

Posted On: 29 DEC 2021 12:22PM by PIB Chennai

டென்லாங் சுயஉதவிக் குழு 2014 ஆம் ஆண்டு மக்காஹோ கிராமத்தில் தொடங்கப்பட்டது. சாஹே பவுண்டேஷன் மூலம் தொடங்கப்பட்ட இந்த சுயஉதவிக்குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை 40 ரூபாய் செலுத்தி வந்தனர். தொடக்கத்தில் இருந்து எந்தவித தடங்கலுமின்றி இந்த சுயஉதவிக்குழு முன்னேற்றம் கண்டு வந்தது. வருவாய் ஈட்டுவதை தவிர தூய்மைப்பணிகள், மருத்துவச் சிகிச்சை ஆகியவற்றை இவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

காளான் வளர்ப்பு, கீரை வகைகள் சாகுபடி, நெசவு நெய்தல், கோழிப்பண்ணை ஆகியவற்றை மேற்கொண்ட சுயஉதவிக்குழு நல்ல வருமானத்தைப் பெற்று வந்தது. இந்த வகையில் 7 ஆண்டுகளில் ரூ.2.50 லட்சத்தை தொகுப்பு நிதியாக தற்போது சேர்த்துள்ளனர். உறுப்பினர்களுக்கு 2 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு உறுப்பினரும் வங்கியில் பெற்ற கடன்களை தங்களது உழைப்பின் மூலம் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தி பாராட்டுக்களை பெற்று வருகின்றனர். சிலர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு அவற்றை விற்று நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786015

*****


(Release ID: 1786074) Visitor Counter : 283