இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இளைஞர் நலன் துறையின் 2021-ம் ஆண்டு முக்கிய செயல்பாடுகள்.

Posted On: 28 DEC 2021 1:06PM by PIB Chennai

2021-ம் ஆண்டில் இளைஞர் நலன் துறையின் முக்கிய செயல்பாடுகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

கொவிட்-19 தடுப்பூசியின் நன்மை குறித்த சரியான தகவல்களை பரப்புதல், தடுப்பூசி பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை வளர்ப்பது, தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 1.27 கோடி இளைஞர் தன்னார்வலர்கள், இளைஞர் சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பிறரின் பங்கேற்புடன் 2.22 லட்சம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தின் கீழ் மிதிவண்டி பேரணிகள் மற்றும் நடைபயணங்கள் நடத்தப்பட்டு 1.59 லட்சம் இளைஞர்கள் மொத்தம் 6.37 லட்சம் கிலோமீட்டர்கள் பயணம் மேற்கொண்டனர்.

தேசிய ஊட்டச்சத்து மாதம்-2021-ன் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு சுமார் 8.3 லட்சம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

 

ஒரு மாதம் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழ்ச்சியில்  56.62 லட்சம் இளைஞர்கள் பங்கேற்று 1.07 கோடி கிலோ கழிவுகள் அகற்றப்பட்டன.

ஒரே பாரதம் உன்னத பாரதம் குறித்த 4000 வலையரங்குகள் நடத்தப்பட்டன.

மூன்று நாள் கங்கை உத்ஸவத்தின் போது நடைபெற்ற தீபோத்ஸவ், கண்காட்சிகள், ரத்த தானம், கலாச்சார நிகழ்ச்சிகள், மஷால் யாத்திரைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இளைஞர் தன்னார்வலர்கள் வெற்றிகரமாக பங்கேற்றனர்.

நேரு யுவகேந்திர சங்கத்தின் அலுவலர்கள், தேசிய இளைஞர் தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார், அசாம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், மகாராஷ்டிரா, கோவா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள இளைஞர் தன்னார்வலர்களுக்காக 4 மனித உரிமைகள் விழிப்புணர்வு பயிலரங்குகள் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நேரு யுவகேந்திர சங்கத்தால் நடத்தப்பட்டன.

2021 பிப்ரவரி 11, 12 மற்றும் 16 மற்றும் 2021 அக்டோபர் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த பயிலரங்குகளில் 4872 பேர் பங்கேற்றனர்.

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக நேரு யுவ கேந்திர இளைஞர் தன்னார்வலர்கள், இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஆதரவுடன் நடைபயணம், உறுதிமொழி மற்றும் பெண்கள் இரு சக்கர வாகனப் பேரணி போன்ற 6,619 நிகழ்ச்சிகளில் 13.22 லட்சம் பேர் பங்கேற்றனர்.

யுனிசெஃப் ஆதரவுடன் 5,679 காணொலி பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கொவிட்-19 மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த சரியான நடைமுறைகள், இளம் கொவிட் வீரராக பதிவு செய்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கொவிட்-19 பரவல் காரணமாக, ஏழாவது சர்வதேச யோகா தினத்தை நேரு யுவ கேந்திர சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை காணொலி முறையில் நடத்தின. 623 மாவட்ட அளவிலான செயல்பாடுகள் மூலம் யோகா நடவடிக்கைகளை நேரு யுவ கேந்திர சங்கம் ஏற்பாடு செய்தது, 2.33 லட்சம் நிகழ்ச்சிகளில் 4.30 கோடி பேர் பங்கேற்றனர். 2.23 லட்சம் கிராமங்களில் இருந்து 75.94 லட்சம் குடும்பங்கள் திரட்டப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785749

                                                                                ********************


(Release ID: 1785905) Visitor Counter : 382