வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

Posted On: 28 DEC 2021 4:12PM by PIB Chennai

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 9 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரயில் திட்டம் ஐஐடி கான்பூரிலிருந்து மோதி ஜீல் வரையிலானது. கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த நீளம் 32 கிலோ மீட்டர். இதில் 2 வழித்தடங்கள் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையில் செல்வதாகும். இது ரூ.11,000 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. முதல் வழித்தடத்தில் 21 ரயில் நிலையங்களும், இரண்டாவது வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்களும் உள்ளன. 

இன்று தொடங்கி வைக்கப்பட்ட 9 கிலோ மீட்டர் நீள மெட்ரோ ரயில் திட்டம் கான்பூர் – மோதி ஜீல் இடையே 9 நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் உத்தரப்பிரதேச முதலமைச்சரால் 15.11.2019 அன்று தொடங்கப்பட்டன. கொவிட்டின் இரண்டாவது அலை இருந்தபோதும் இதன் கட்டுமானப் பணிகள் அனைத்துத் தடைகளையும், சவால்களையும் கடந்து துரிதமாக நடைபெற்றன. கட்டுமானம், சமிக்ஞை முறை, ரயில் பாதை, மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டு, மின்சாரப் பாதைப் பணி போன்றவை இரண்டு ஆண்டு காலத்திற்குள்ளாகவே முடிக்கும் திறமையை உ.பி. எம்.ஆர்.சி. பெற்றிருந்தது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785815

 

******

(Release ID: 1785815)

 


(Release ID: 1785838) Visitor Counter : 230