பாதுகாப்பு அமைச்சகம்

எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தால் நான்கு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் கட்டப்பட்ட 24 பாலங்கள் & மூன்று சாலைகளை பாதுகாப்பு துறை அமைச்சர் காணொளி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்தார்

Posted On: 28 DEC 2021 2:07PM by PIB Chennai

எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தால் நான்கு  மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் கட்டப்பட்ட 24 பாலங்கள் & மூன்று சாலைகளை, டிசம்பர் 28, 2021 அன்று புதுடில்லியிலிருந்து   பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்  காணொளி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த 24 பாலங்களில் 9 பாலங்கள் ஜம்மு & காஷ்மீரிலும், லடாக் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தலா 5 பாலங்கள், உத்தராகண்டில் 3, சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் தலா 1 பாலம் கட்டப்பட்டுள்ளது. மூன்று சாலைகளில் இரண்டு லடாக்கிலும் மற்றொன்று மேற்கு வங்கத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

சிக்கிமின் டோகலாவில் 11,000 அடி  உயரத்தில் 140 அடி இரட்டை பாதை வசதிக் கொண்ட இந்தியாவின் கிளாஸ் 70 வகை முதலாவது உள்நாட்டு தொழில்நுட்பத்திலான பாலம் திறந்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று லடாக்கின் உம்லிங் கனவாய் பகுதியில் 19,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் கின்னஸ் உலக சாதனை  புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.  நிகழ்ச்சியில் பேசிய திரு.ராஜ்நாத்சிங், இந்தப் பாலங்கள் மற்றும் சாலைகள் திறக்கப்பட்டிருப்பது,  எல்லைப்பகுதிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவதென்ற எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகக் கூறினார்.  

இதுபோன்ற கட்டுமானப்பணிகள், புதிய இந்தியாவைப் படைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.   உம்லிங்-லா கனவாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை, பாதுகாப்புப்படையினரின் விரைவான போக்குவரத்திற்கு உதவுவதுடன், சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, இப்பகுதியின் சமூக-பொருளாதா முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்றும் திரு.ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

அதேபோன்று, உள்நாட்டு தொழில்நுட்பத்திலான இரட்டைப் பாதை பாலம், தற்சார்பு இந்தியாவிற்கு, மிகச்சிறந்த உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785767

***************



(Release ID: 1785789) Visitor Counter : 231