பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல்லைகள் ரோடு அமைப்பின் வருடாந்திர மாநாடு: பாதுகாப்புத்துறை செயலாளர் தொடங்கி வைத்தார்

Posted On: 27 DEC 2021 2:13PM by PIB Chennai

தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உபகரணங்கள்  மேலாண்மை குறித்த வருடாந்திர மாநாட்டை எல்லைகள் ரோடு அமைப்பு புதுதில்லியில் இன்று நடத்தியது. இந்த மூன்று நாள் மாநாட்டை பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் தொடங்கி வைத்தார்.  எல்லைகள் ரோடு அமைப்பின் தலைமை இயக்குனர்  லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சௌத்ரி உள்ளிட்ட அதிகாரிகள்  இதில் கலந்து கொண்டனர். எல்லைப் பகுதியில் சாலை கட்டமைப்பு மேம்பாடு, புதிய தொழில்நுட்ப பயன்பாடு,  போன்றவற்றில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்கான வாய்ப்பை இந்த மாநாடு வழங்குகிறது. இந்த மாநாட்டில் தற்போதைய திட்டங்கள் குறித்தும், அடுத்தாண்டிற்கான திட்டங்கள் குறித்தும் எல்லைகள் ரோடு அமைப்பு ஆய்வு செய்யும். இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் திரு அஜய்குமார் எல்லைப் பகுதிகளில் ரோடுகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் விமான தளங்கள் அமைப்பதில் எல்லைகள் ரோடு அமைப்பின் பங்கை பாராட்டினார். தொலைதூர எல்லைப் பகுதிகளை நாட்டின் முக்கிய பகுதிகளுடன் இணைப்பதற்காக 102 புதிய ரோடுகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை எல்லைகள் ரோடு அமைப்பு கட்டியதற்காக அவர் பாராட்டினார். அடல் சுரங்கப்பாதை உட்பட பல முக்கிய திட்டங்களை மேற்கொண்ட எல்லைகள் ரோடு அமைப்பின் பணியாளர்களின் உறுதியை அவர் பாராட்டினார்.

சிறப்பாக பணியாற்றியதற்காக எல்லைகள் ரோடு அமைப்பின் பல பிரிவுகளுக்கு அவர் கோப்பைகளையும் வழங்கினார்.

எல்லைகள் ரோடு அமைப்பின் 75 வீரர்கள்,  நாடு முழுவதும் 75 நாள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு நேற்று தில்லி திரும்பினர். அவர்களையும் டாக்டர் அஜய்குமார் கொடியசைத்து வரவேற்றார். இந்த பிரிவினர் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முக்கிய பகுதிகளில் பயணம் மேற்கொண்டனர். தேசிய ஒற்றுமை மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த தகவல்களையும் இவர்கள் பரப்பினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785486

***************


(Release ID: 1785579) Visitor Counter : 246