பாதுகாப்பு அமைச்சகம்

லக்னோவில் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையம், பிரம்மோஸ் தயாரிப்பு மையத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

Posted On: 26 DEC 2021 3:16PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வின்  பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையம், பிரம்மோஸ் தயாரிப்பு மையத்திற்கு இன்று  அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு உ.பி. மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்தார். உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு மற்றும் விமானவெளி உற்பத்தி தொகுப்புகளை மேம்படுத்தும் வகையில், சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் இது உருவாகிறது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் அறிவித்துள்ள பிரம்மோஸ் தயாரிப்பு மையம் நவீன தொழில்நுட்பத்துடன் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது. அடுத்த தலைமுறை புதிய பிரம்மோஸ் என்ஜி ஏவுகணையைத் தயாரிக்கும் வகையில் , அடுத்த இரண்டு மூன்று ஆண்டு காலத்தில் இம்மையம் உருவாகி விடும். ஆண்டுக்கு 80 முதல் 100 பிரம்மோஸ்-என்ஜி  ஏவுகணைகளைத் தயாரிக்கும் திறனை இது பெற்றிருக்கும்.

டிஆர்டிஓ மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களைப் பாராட்டிய திரு. ராஜ்நாத் சிங், இந்த இரண்டு மையங்களும் தேசிய பாதுகாப்பிலும், பாதுகாப்பு உற்பத்தியிலும், உ.பி.யின் பொருளாதாரத்திலும்  முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கான தற்சார்பு இந்தியா-வை எட்ட இது பெரிதும் உதவும் என்று அவர் கூறினார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம், வருமானம் பெருக வழி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785316

**************



(Release ID: 1785362) Visitor Counter : 264