ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தீன் தயாள் உபாத்யாயா கிராம கவுசல்யா திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி அமைச்சகம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது
प्रविष्टि तिथि:
26 DEC 2021 12:29PM by PIB Chennai
விடுதலையின் அமிர்தப்பெருவிழா இயக்கத்தின் ஒரு பகுதியாக, டிசம்பர் 17 முதல் 23 வரை ஏழு நாட்களுக்கு நாடு முழுவதும் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு கண்காட்சிகளில் 30 பெரிய துறைகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.தீன் தயாள் உபாத்யாயா கிராம கவுசல்யா திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால், இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த திட்டம் 27 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1891 திட்டங்களுக்கான 2369 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் 2014 செப்டம்பர் 25 –ம் தேதி துவங்கப்பட்டதில் இருந்து ,இதுவரை 7.13 லட்சம் விண்ணப்பதாரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785270
*****
(रिलीज़ आईडी: 1785329)
आगंतुक पटल : 245