நித்தி ஆயோக்
“ஆரோக்கியமான மாநிலங்கள் முன்னேறும் இந்தியா” எனும் மாநிலங்களின் செயல்பாடு குறித்த தரவரிசையின் நான்காவது தொகுப்பை 2021 டிசம்பர் 27 அன்று நித்தி ஆயோக் வெளியிட உள்ளது
प्रविष्टि तिथि:
25 DEC 2021 11:32AM by PIB Chennai
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுகாதாரம் குறித்த ஒட்டு மொத்த செயல்பாடு மற்றும் ஊக்கமளிக்கும் செயல்பாட்டுக்கான வருடாந்திர சுகாதாரக் குறியீடு. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், உலக வங்கி ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு நித்தி ஆயோக் மூலம் வெளியிடப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடையே, சுகாதார பயன்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின் செயல்பாடு ஆகியவற்றில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் குறியீடு வெளியிடப்படுகிறது.
பெரும்பாலான மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தரவுகளின் தரம், உரிய காலத்தில் கிடைப்பது ஆகியவற்றை மேம்படுத்த இந்தக் குறியீட்டு அறிக்கை பயன்படுவதோடு தரவுகளை பயன்படுத்தும் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.
இத்தகைய அறிக்கையின் 2019-20 நிதியாண்டுக்கான நான்காவது தொகுப்பை நித்தி ஆயோக் 2021 டிசம்பர் 27 அன்று நண்பகல் 12 மணிக்கு வெளியிட உள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1785072
------
(रिलीज़ आईडी: 1785106)
आगंतुक पटल : 371