பிரதமர் அலுவலகம்
அகில இந்திய மேயர்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
प्रविष्टि तिथि:
17 DEC 2021 5:32PM by PIB Chennai
ஹர ஹர மகாதேவா!
வணக்கம்!
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களே, உத்தரப் பிரதேச அமைச்சர்களே, அகில இந்திய மேயர் கவுன்சில் தலைவர் திரு. நவீன் ஜெயின் அவர்களே, காசியில் கூடியிருக்கும் அனைத்து மேயர்களே, சகோதர, சகோதரிகளே... காசி எம்.பி.யாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
இந்த மாநாட்டில், இந்தியாவின் நகரங்களின் சிறந்த எதிர்காலத்துக்கு, உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
காசியை மேம்படுத்துவது ஒட்டு மொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக அமையும் என நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். நம் நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்கள் பாரம்பரிய நகரங்கள். அவை பாரம்பரிய முறையில் மேம்படுத்தப்படுகின்றன. தற்போதைய நவீனமயமான யுகத்தில் இது போன்ற நகரங்களின் புராதனத் தன்மையைப் பாதுகாப்பதும் அவசியம். பாரம்பரியம் மற்றும் உள்ளூர் திறமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை இது போன்ற நகரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. தற்போதுள்ள கட்டிடங்களை அகற்றுவது சரியான வழியல்ல. அதே வேளையில் அவற்றைப் புதுப்பித்து பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நண்பர்களே,
தூய்மையைப் பராமரிப்பதில் நகரங்களுக்கு இடையே, ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும். நகரங்களை அங்கீகரிக்க புதிய வகைப்பாடு ஏதும் இருந்தால், அவை தூய்மை நிலையை அடையவும், சிறப்பாக பணியாற்றும் நகரங்களாக மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். நகரங்களை புதுப்பிக்கும் பணியுடன் தூய்மைப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்வது அவசியம். அந்த வகையில், தங்களது நகரங்களில் உள்ள வார்டுகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை மேயர்கள் உருவாக்க வேண்டும்.
‘சுதந்திரப்பெருவிழா’ தொடர்பான, அதாவது சுதந்திரப் போராட்டம் குறித்த ‘ரங்கோலி’ போட்டிகள், பாட்டுப் போட்டி மற்றும் வாய்ப்பாட்டுப் போட்டி, போன்ற நிகழ்ச்சிகளுக்கு மேயர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இது குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளேன். மேலும் நகரங்கள் உருவான தினங்களைக் கண்டறிந்து அவற்றைக் கொண்டாடலாம். ஆறுகள் ஓடும் நகரங்கள், ஆற்றுத் திருவிழாக்களைக் கொண்டாடலாம். ஆறுகளின் பெருமையை பறைச்சாற்ற வேண்டியது அவசியம். இதன் மூலம் மக்கள் ஆறுகளின் பெருமையை உணர்ந்து அவற்றை தூய்மையாகப் பராமரிப்பதன் அவசியத்தை அறிவார்கள். ஆறுகளை மீண்டும் நகர வாழ்க்கையின் முக்கிய அம்சமாக்க வேண்டும். இது உங்களது நகரங்களுக்கு புது வாழ்வை அளிக்கும்.
, கழிவுகளை பணமாக்குவதற்கான வழிகளையும் மேயர்கள் ஆராய வேண்டும். “நமது நகரம் தூய்மையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பதற்கு, இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அந்தந்த நகரங்களில் உள்ள தெருவிளக்குகள் மற்றும் வீடுகளில் எல்இடி மின்விளக்குகள் பெருமளவு பயன்படுத்தப்படுவதை மேயர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தப் பணியை ஒரு இயக்கமாக மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள திட்டங்களை புதிய பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது குறித்து பரிசீலிப்பதுடன் அவற்றை முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராய வேண்டும். அந்தந்த நகரங்களில் உள்ள தேசிய மாணவர் படைப்பிரிவுகளை மேயர்கள் தொடர்பு கொண்டு நகரத்தில் உள்ள சிலைகளை தூய்மைப்படுத்த குழுக்களை அமைப்பதுடன், “சுதந்திரப் பெருவிழா“ குறித்த சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போன்று, சுதந்திரப் பெருவிழாவைக் குறிக்கும் வகையில், நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்து அரசு தனியார் பங்களிப்பில் அதனை செயல்படுத்த வேண்டும். ‘ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் உற்பத்தி’ திட்டத்தை மேயர்கள் ஊக்குவிக்க வேண்டும். அந்தந்த நகரங்களின் பிரத்யேக அடையாளத்தை பிரபலப்படுத்த, சம்பந்தப்பட்ட நகரங்களின் பிரத்யேக உற்பத்திப் பொருள் அல்லது இடத்தைத் தேர்வு செய்து மேயர்கள் ஊக்குவிக்க வேண்டும். நகர்ப்புற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில், மக்களுக்கு உகந்த கருத்துக்களை உருவாக்க வேண்டும்.
பொதுப் போக்குவரத்து வசதிகளை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த நாடாக இந்தியாவை மாற்றும் திட்டத்தின்படி நகரங்களில் உள்ள அனைத்துக் கட் டிடங்களையும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்வதற்கு உகந்த இடங்களாக மாற்ற மேயர்கள் முயற்சிக்க வேண்டும்.
“நமது நகரங்கள்தான் நமது பொருளாதாரத்தின் உந்துசக்தி. நகரங்களை வலிமை வாய்ந்த பொருளாதார மையமாக நாம் மாற்ற வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடிய சூழலை ஒரே நேரத்தில் உருவாக்குவதற்கான ஒட்டுமொத்த நடைமுறையை உருவாக்க வேண்டும்.
நமது வளர்ச்சித் திட்டத்தில் குறு,சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும். “சாலையோர வியாபாரிகள் நமது பயணத்தின் ஒரு அங்கம், ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் இடையூறுகளைச் சந்திப்பதை நாம் காண்கிறோம். அவர்களுக்காக நாம் பிரதமரின் ஸ்வாநிதித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். இந்தத் திட்டம் மிகச் சிறந்தது. உங்களது நகரங்களில் உள்ள சாலையோர வியாபாரிகளின் பட்டியலைத் தயாரித்து செல்போன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்து அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இது வங்கி நிதிச் சேவை பயன்பாட்டை மேம்பட்டதாக மாற்றும். பெருந்தொற்றுக் காலத்தில் அவர்களது முக்கியத்துவம் மிகத் தெளிவாக தெரியவந்தது.
தங்களது அனுபவங்களிலிருந்து காசியின் மேம்பாட்டுக்கான ஆலோசனகளை மேயர்கள் வழங்க வேண்டும். “உங்களது ஆலோசனைகளுக்காக நான் பெரிதும் நன்றியுடையவனாக இருப்பேன், உங்களது முதல் மாணவன் நான்தான். “ சர்தார் படேல் அகமதாபாத் மாநகர மேயராக இருந்தார். நாடு இன்றைக்கும் அவரை நினைவு கூர்கிறது என்றார். மேயர் பதவி என்பது அர்த்தமுள்ள அரசியல் வாழ்க்கையின் முதல் படிக்கல். அதன் மூலம் நீங்கள் நாட்டு மக்களுக்கு பணியாற்றலாம்.
மிக்க நன்றி. வாழ்த்துக்கள்!
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782725
**************
(रिलीज़ आईडी: 1784697)
आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam