பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
வன் தன் திட்டம் மற்றும் 14 தேன் உற்பத்தியாளர் அமைப்புகள் பற்றிய இதழ் : மத்திய அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா நாளை வெளியிடுகிறார்.
प्रविष्टि तिथि:
22 DEC 2021 4:15PM by PIB Chennai
‘‘டிரைஃபட் வன் தன் - பழங்குடியினர் மன உறுதி மற்றும் தொழில் குறித்த இதழை மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா தில்லியில் நாளை வெளியிடுகிறார். 14 தேன் உற்பத்தியாளர் அமைப்புக்கள் மற்றும் வன உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான இணையதளம் ஆகியவற்றையும் திரு அர்ஜூன் முண்டா தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ‘சம்வாத்’ என்ற தகவல் தொடர்பு பிரச்சாரம், இந்திய பழங்குடியினர் மற்றும் வன உற்பத்தி பொருட்களை பிரபலபடுத்தும் 9 வீடியோக்கள் ஆகியவற்றையும் திரு .அர்ஜூன் முண்டா வெளியிடுகிறார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784202
******************************************
(रिलीज़ आईडी: 1784375)
आगंतुक पटल : 221