பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

2022 பருவத்திற்கான கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 DEC 2021 5:19PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், 2022 கொள்முதல் பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2021 பருவத்தில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.10,335  ஆக இருந்த அரவைக் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 2022 பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.10,590 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பந்து கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.10,600-லிருந்து ரூ.11,000 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வேளாண் செலவினங்கள் மற்றும் விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைக்கேற்ப இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான முக்கியமான மற்றும் முன்னேற்றகரமான ஒரு நடவடிக்கையாக 50% லாபம் கிடைப்பதை இது உறுதி செய்யும்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784257

********



(Release ID: 1784331) Visitor Counter : 232