புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்
Posted On:
21 DEC 2021 1:28PM by PIB Chennai
மார்ச் 2014-ல் 76.37 ஜிகாவாட்டாக இருந்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் (பெரிய அளவிலான நீர் மின் திட்டங்கள் உட்பட) நவம்பர் 2021-ல் சுமார் 97% அதிகரித்து 150.54 ஜிகாவாட்டாக உள்ளது.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
- தானியங்கி முறையில் 100 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
- 2025 ஜூன் 30-க்குள் உற்பத்தியைத் தொடங்க உள்ள திட்டங்களிலிருந்து சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தை மாநிலங்களிடையே எடுத்துச் செல்வதற்கான விற்பனைக் கட்டணம் தள்ளுபடி.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வெளியே எடுத்துச் செல்ல ஏதுவாக உரிய மின்வெளித்தடங்களை ஏற்படுத்துவதோடு புதிய துணை மின் நிலையங்களையும் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783761
-----
(Release ID: 1783954)