சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளை மூடுதல்

प्रविष्टि तिथि: 20 DEC 2021 3:03PM by PIB Chennai

குறைந்த அளவு பயன்பாடு கொண்ட மற்றும் அதிகளவு குப்பைகளை குவிக்கக்கூடிய ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் தடைவிதிப்பது குறித்த பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்  துறை 12 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிட்டுள்ளது.

பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பொறுத்தவரை  அவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி, சேமித்து வைத்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனைக்கு தடைவிதிக்க பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-ல் வகை செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக, 75 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகளுக்கு 30 செப்டம்பர் 2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  120 மைக்ரானுக்கும் குறைவான  பிளாஸ்டிக் கேரிபேக்குகளுக்கு 31 டிசம்பர் 2022 முதல் தடைவிதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவ்பே தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783418

•••••••••••••••


(रिलीज़ आईडी: 1783522) आगंतुक पटल : 322
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali , Telugu