உள்துறை அமைச்சகம்
புனேவில் தேசிய பேரிடர் மீட்புபடையின் 5வது பட்டாலியன் வளாகம் மற்றும் தடையவியல் வளாகம்: மத்திய உள்துறை அமசை்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்
Posted On:
19 DEC 2021 6:41PM by PIB Chennai
மகாராஷ்டிராவில் இன்று 2வது நாளாக பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் புனேவில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின்(என்டிஆர்எப்) 5வது பட்டாலியன் வளாகத்தை தொடங்கி வைத்தார். புனேவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய தடையவியல் அறிவியல் ஆய்வு கூட (சிஎப்எஸ்எல்) வளாகத்தையும் அவர் ஆய்வு செய்து புதிய கட்டிடத்தை தொடங்கி வைத்தார்.
புதிய என்டிஆர்எப் வளாகத்தில், வீரர்களுக்கான தங்கும் இடங்கள், பள்ளி, மருத்துவமனை, ஏடிஎம், வணிக வளாகம், ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
என்டிஆர்எப் வீரர்களுடன் அவர் மதிய உணவு சாப்பிட்டு கலந்துரையாடினார். மத்திய உள்துறை செயலாளர் மற்றும் என்டிஆர்எப் தலைமை இயக்குனர் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா பேசியதாவது:
இயற்கை பேரிடர் சமயத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளனர். அவர்கள் வந்தால், மக்கள் மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. குறுகிய காலத்தில் என்டிஆர்எப்-ன் 16 பட்டாலியன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் நாடு முழுவதும் தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றனர்.
இந்தியாவில் மட்டும் அல்லாமல் என்டிஆர்எப் குழுவினர் வெளிநாடுகளுக்கும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது இந்தியாவுக்கு நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் இன்று தடையவியல் அறிவியல் ஆய்வுக்கூடம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இதுவரை,நாட்டில் 7 தடையவியல் கூடங்கள் உள்ளன.
நாட்டின் முதல் தடையவியல் அறிவியல் பல்கலைக்கழகம் குஜராத்தில் ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற ஒரு கல்லூரி ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 தடையவியல் அறிவியல் ஆய்வுக்கு அமைக்கப்பட வேண்டும். இவை உள்நாட்டு பாதுகாப்புக்கும்,நாட்டில் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783248
************************
(Release ID: 1783274)
Visitor Counter : 253